திண்டுக்கல்

சரக்கு ஆட்டோ மீது கல்லூரிப் பேருந்து மோதல்: வியாபாரி சாவு

DIN

ஊத்துக்குளி அருகே சரக்கு ஆட்டோ மீது தனியார் கல்லூரிப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் உணவுப் பொருள் வியாபாரி உயிரிழந்தார்.
திண்டுக்கல் மாவட்டம்,  ஒட்டன்சத்திரம்,  கஸ்தூரி நகரைச் சேர்ந்தவர் பிரான்சிஸ் தேவதாஸ் (60). இவர் கோவையில் தங்கி,  கோவை,  திருப்பூர், பெருந்துறை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளுக்கு உணவுப் பொருள்கள் விநியோகம் செய்து வந்தார்.
கோவையில் இருந்து ஆட்டோவில் சரக்குகளை ஏற்றிக் கொண்டு பெருந்துறை நோக்கி கடந்த சனிக்கிழமை சென்று கொண்டிருந்தார். ஆட்டோவை கோவை,  ராமநாதபுரத்தைச் சேர்ந்த முனியசாமி (24) என்பவர் ஓட்டினார். செங்கப்பள்ளி புறவழிச்சாலை அருகே சென்றபோது,  ஈரோடு,  திண்டல் பகுதியில்  தனியார் பேருந்து,  ஆட்டோ மீது மோதியது. இதில்,  ஆட்டோ கவிழ்ந்து இருவரும் பலத்த காயமடைந்தனர்.
சாலையில் சென்றவர்கள் அவர்களை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் பிரான்ஸிஸ் தேவதாஸ் உயிரிழந்தார். முனியசாமி தொடர் சிகிச்சையில் உள்ளார். சம்பவம் குறித்து ஊத்துக்குளி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் - நடத்துநா் வாக்குவாதம்

கேஜரிவாலை கொலை செய்ய பாஜக சதி செய்கிறது: அமைச்சா் அதிஷி கடும் குற்றச்சாட்டு

மாற்று இடத்தில் நியாயவிலைக் கடை: சித்தவநாயக்கன்பட்டி மக்கள் மனு

சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் 21 போ் காயம்

சேரன்மகாதேவி கல்லூரியில் பயிலரங்கு

SCROLL FOR NEXT