முகப்பு
திண்டுக்கல்

கழிவுகளை அகற்ற "ரோபோ' பயன்படுத்தக்கோரி மனு

கழிவுநீர் கால்வாய்களில் கழிவுகளை அகற்றுவதற்கு கேரளத்தைப் போல் தமிழகத்தில் ரோபோக்களை பயன்படுத்த வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

Updated On : 10 ஜூலை, 2018 at 12:58 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:40 PM

கழிவுநீர் கால்வாய்களில் கழிவுகளை அகற்றுவதற்கு கேரளத்தைப் போல் தமிழகத்தில் ரோபோக்களை பயன்படுத்த வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
 ஆதித்தமிழர் பேரவையின் திண்டுக்கல் மாவட்ட செயலர் எம்.வி.காளிராஜ் கட்சியின் நிர்வாகிகளுடன் சென்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவினை அளித்தார். அவர் கூறியது: 
மனித கழிவுகளை மனிதனே அகற்றும் அவலத்தை தவிர்க்கும் வகையில், மலம் அள்ளுதல் தடை மற்றும் மறுவாழ்வு சட்டம் 2018 அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும், மலக் குழியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடும் ஊழியர்கள், ஏதாவது ஒரு பகுதியில் விஷ வாயு தாக்கி உயிரிழிப்பது தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த சூழலில் கழிவுநீர் கால்வாய்களில் உள்ள கழிவுகளை அகற்றுவதற்கு கேரள மாநிலத்தில்  ரோபோ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தொழில் நுட்பத்தின் மூலம் மத்திய அரசின் மலம் அள்ளுதல் மற்றும் மறுவாழ்வு சட்டத்தை முழுமையாக செயல்படுத்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 
அதே போன்று  தமிழகத்திலும்  நடைமுறைபடுத்த வேண்டும் என கடந்த மார்ச் மாதம் அரசை வலியுறுத்தியுள்ளோம். ஆனாலும்,  இதுதொடர்பாக தமிழக அரசு எவ்வித முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை. 
மலக் குழிகளில் ஏற்படும் மரணங்களை தடுக்க, கழிவுகளை அகற்றுவதற்கான ரோபோக்களை உடனடியாக தமிழகத்திலும் பயன்பாட்டிற்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.