சிறப்புக் காவல் படை முகாமுக்குள் புகுந்த நல்ல பாம்பு
பழனி சிறப்புக் காவல்படை முகாமுக்குள் ஞாயிற்றுக்கிழமை புகுந்த நல்ல பாம்பை, தீயணைப்புப் படை வீரர்கள் பிடித்து வனத் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:40 PM
பழனி சிறப்புக் காவல்படை முகாமுக்குள் ஞாயிற்றுக்கிழமை புகுந்த நல்ல பாம்பை, தீயணைப்புப் படை வீரர்கள் பிடித்து வனத் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
பழனி-புதுதாராபுரம் சாலையில் தமிழ்நாடு சிறப்புக் காவல்படை 14 ஆம் அணி செயல்பட்டு வருகிறது. இங்கு, காவலர் குடியிருப்பு, அலுவலகம், உணவகம் ஆகியன உள்ளன. இங்கு, சுமார் 6 அடி நீளமுள்ள நல்லபாம்பு புகுந்தது. உடனே, காவலர்கள் பழனி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த வீரர்கள் அந்த பாம்பை உயிருடன் பிடித்து, வனத் துறை வசம் ஒப்படைத்தனர். அவர்கள், பாம்பை தேக்கன்தோட்டம் வனப் பகுதியில் விட்டனர்.