முகப்பு
திண்டுக்கல்

கொடைக்கானல் அருகே மஞ்சுவிரட்டு

கொடைக்கானல் அருகே பூம்பாறை கிராமத்தில் வியாழக்கிழமை மாலை மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

Updated On : 30 மார்ச், 2018 at 1:30 AM
பகிர்:

கொடைக்கானல் அருகே பூம்பாறை கிராமத்தில் வியாழக்கிழமை மாலை மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான பூம்பாறையில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு குழந்தை வேலப்பர் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்நது அப்பகுதிகளிலுள்ள உழவு மாடுகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி  நடைபெற்றது. 
இந்நிகழ்ச்சியில் பூம்பாறை பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாடுகள் கலந்து கொண்டன. அவற்றை பிடிக்கும் 
நிகழ்ச்சியில் பூம்பாறை பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர் இந் நிகழ்ச்சியை ஏராளமான கிராம மக்கள் பார்த்து ரசித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.