திண்டுக்கல்

பழனியில் நாளை கோரிக்கை தீர்வு முகாம்

DIN

பழனி சார்-ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (நவ.16) நீண்ட நாள் கோரிக்கைகளுக்கான தீர்வு முகாம் நடைபெறவுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி சார்-ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு  நீண்ட நாள்களாக தீர்வு காணப்படாமல் நிலுவையிலுள்ள  மனுக்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, தீர்வு முகாம் நடைபெற உள்ளது.  எனவே பழனி கோட்டத்தில் உள்ள பழனி, ஒட்டன்சத்திரம் மற்றும் வேடசந்தூர் வட்டத்தினைச் சேர்ந்த பொதுமக்கள் இந்த முகாமில் பங்கேற்று பயன் பெறலாம்.
பொதுமக்கள்  தங்கள் கோரிக்கை குறித்து மனுக்கள் அளித்து  நீண்ட நாள்களாக தீர்வு காணப்படாமல் நிலுவையிலுள்ள பட்டா மாறுதல், வீட்டுமனைப்பட்டா, வாரிசுச் சான்று,  முதியோர்  உதவித்தொகை, ஆதரவற்ற விதவைச் சான்று, நிலம் எடுப்புத் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து நேரடியாக மனுக்கள் அளித்து  தீர்வு காணலாம். 
மேலும் இந்த சிறப்பு முகாமில் கலந்து கொண்டு, தங்களது நீண்டநாள் கோரிக்கைகளுக்கு தீர்வு காணலாம் என சார்-ஆட்சியர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கௌதம் கம்பீர் ஸ்டைலில் விளையாடுகிறோம்: ஹர்ஷித் ராணா

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவருக்கு நேர்ந்த சோகம்!

ஆதியின் அல்லி!

150 இடங்களில் கூட தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறாது! ராகுல் பேச்சு

100 நாள் வேலை திட்ட ஊதியம் ரூ. 400 ஆக உயர்த்தப்படும் -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT