திண்டுக்கல்

கல்லறைச் சிலுவைகள் சேதம்: திண்டுக்கல்லில் சாலை மறியல்

DIN

திண்டுக்கல்லில் கல்லறைச் சிலுவைகளை சேதப்படுத்திய மர்ம நபர்களை கைது செய்யக் கோரி, சாலை மறியல் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திண்டுக்கல் கிழக்கு மரியநாதபுரம் பகுதியில் தாழ்த்தப்பட்டோர் கிறிஸ்தவர்களுக்கான கல்லறைகள் உள்ளன. இந்தக் கல்லறைப் பகுதியிலிருந்த மரத்திலான சிலுவைகளை மர்ம நபர்கள் திங்கள்கிழமை இரவு சேதப்படுத்தியுள்ளனர். பின்னர், அப்புறப்படுத்தப்பட்ட சிலுவைகளை ஒரே இடத்தில் வைத்து தீ வைத்துவிட்டுச் சென்றுள்ளனர்.
செவ்வாய்க்கிழமை அவ்வழியாகச் சென்ற அப்பகுதியினர் கல்லறைச் சிலுவைகள் சேதப்படுத்தப்பட்டிருப்பதை கண்டுள்ளனர். உடனே, மரியநாதபுரம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், கல்லறைகளை சேதப்படுத்திய மர்ம நபர்களை கைது செய்ய வலியுறுத்தி, திண்டுக்கல் மாலைப்பட்டி சாலையில் திரண்டு மறியலில் ஈடுபட்டனர். 
இந்த மறியல் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் இரா. சச்சிதானந்தம் தலைமையில், அக்கட்சி நிர்வாகிகளும் கலந்துகொண்டனர். இது குறித்து சச்சிதானந்தம் தெரிவித்தது:
மத நல்லிணக்கத்துடன் வாழும் மக்களிடையே மோதலை ஏற்படுத்தும் நோக்கில், சில சமூக விரோதிகள் இதுபோன்ற செயலில் ஈடுபட்டுள்ளனர். இதில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்வதற்கு காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.
மறியல் போராட்டம் குறித்து தகவலறிந்த திண்டுக்கல் கிழக்கு வட்டாட்சியர் ராஜேஸ்வரி மற்றும் தாலுகா போலீஸார், சம்பவ இடத்துக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். கல்லறைச் சிலுவைகளை சேதப்படுத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'ஊழலை நீக்கும் வாஷிங் மெஷின்' - பாஜகவைக் கிண்டலடிக்கும் ஆம் ஆத்மி!

‘தரம் தாழ்ந்த விமர்சனங்கள் காயப்படுத்துகின்றன..’: ஜி.வி.பிரகாஷ்

பம்பை: வாகன நிறுத்தத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்!

சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் மெட்ரோ சேவை சீரானது!

டைம்ஸ் உயா்கல்வி நிறுவனத் தரவரிசை: 168 ஆவது இடத்தில் கேஐஐடி பல்கலைக்கழகம்

SCROLL FOR NEXT