திண்டுக்கல்

நத்தம் காளியம்மன் கோயில் திருவிழா

நத்தம் மீனாட்சிபுரத்திலுள்ள காளியம்மன் கோயில் பங்குனிப் பெருவிழா மஞ்சள் நீராட்டுதலுடன் புதன்கிழமை நிறைவுப் பெற்றது. 

DIN

நத்தம் மீனாட்சிபுரத்திலுள்ள காளியம்மன் கோயில் பங்குனிப் பெருவிழா மஞ்சள் நீராட்டுதலுடன் புதன்கிழமை நிறைவுப் பெற்றது. 
இத்திருவிழாவினையொட்டி, அம்மன் குளத்திலிருந்து மேளதாளம் முழங்க செவ்வாய்க்கிழமை கரகம் எடுத்துவரப்பட்டது. அரண்மனை மாவிளக்கு எடுத்தலுக்கு பின், பக்தர்கள் சார்பில் பால்குடம், அக்னிசட்டி எடுத்தல் மற்றும் ஊர்மாவிளக்கு, முளைப்பாரி ஊர்வலம் உள்ளிட்ட நேர்த்திக் கடன்களை செலுத்தினர்.   அரண்மனை பொங்கல், ஊர்பொங்கல் மற்றும் கிடாய் வெட்டுக்கு பின், செவ்வாய்க்கிழமை இரவு கரகம் அம்மன்குளத்தில் போய் சேர்க்கப்பட்டது. பங்குனிப் பெருவிழாவின் நிறைவாக,  அம்மன் மஞ்சள் நீராட்டுதல் புதன்கிழமை நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவட்டாறு அருகே தூக்கிட்டு தற்கொலை

விஜய் நியாயத்தைப் பேச வேண்டும்: அண்ணாமலை பேட்டி

இந்து மத துரோகிகள் திமுக, காங்கிரஸ்: அண்ணாமலை பேச்சு

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 2

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரா் டிஎஸ். டி சில்வா மறைவு!

SCROLL FOR NEXT