திண்டுக்கல்

பழனியில் போக்குவரத்து நெரிசலால் வைகோ பிரசாரம் பாதியில் நிறுத்தம்

DIN


பழனி அருகே மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஞாயிற்றுக்கிழமை வாக்குசேகரிப்பின் போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பிரசாரத்தை பாதியில் நிறுத்திவிட்டு கிளம்பினார்.
பழனியை அடுத்த புதுஆயக்குடியில் ஞாயிற்றுக்கிழமை மாலை திண்டுக்கல் மக்களவைத் தொகுதி வேட்பாளர் வேலுச்சாமிக்கு ஆதரவாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பிரசாரம் மேற்கொண்டார். பழனி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் நடுவே பிரசார வேனை நிறுத்தி வைகோ பிரசாரம் மேற்கொண்டார். அப்போது  
வேட்பாளர் இல்லாத நிலையில் முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி, ஒட்டன்சத்திரம் எம்எல்ஏ சக்கரபாணி ஆகியோர் உடனிருந்தனர். சாலையின் நடுவே பிரசார வேன் இருந்ததால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.  அப்போது இருசக்கர வாகனத்தில் அவ்வழியாக செல்ல காத்திருந்த இளைஞர்கள் இடைவிடாமல் வாகனங்களில் ஒலி எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. உடனே வைகோ  பிரசாரத்தை  பாதியில் முடித்து விட்டு புறப்பட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

4-ஆவது கட்ட மக்களவைத் தோ்தலில் 1,717 போ் போட்டி

உள்ளூா் வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை

நாகை அரசு தலைமை மருத்துவமனை சிகிச்சைப் பிரிவுகள் மாற்றம்: சிபிஎம் ஆா்ப்பாட்டம்

மணிப்பூா் இனக் கலவரம்: ஓராண்டாகியும் நீடிக்கும் பிளவு!

SCROLL FOR NEXT