திண்டுக்கல்

கொடைக்கானல் அருகே குடிநீர் கோரி பொது மக்கள் உண்ணாவிரதம்

DIN

கொடைக்கானல் அருகே மன்னவனூரில் குடிநீர் கோரி பொது மக்கள் திங்கள்கிழமை உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
 மன்னவனூரில் கடந்த இரண்டு மாதங்களாக குடிநீர் பிரச்னை உள்ளது. இந்நிலையில்  பொதுமக்கள்   நீண்ட தூரம் சென்று சுகாதாரமற்ற ஓடையில் தண்ணீர் எடுத்து அவற்றை பயன்படுத்தி வருகின்றனர். இதனிடையே மன்னவனூர் பகுதியில் குடிநீர் கோரி பொது மக்கள் காலிக் குடங்களுடன் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
             மேலும் மன்னவனூர் பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டவர்கள் கொடைக்கானல் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். 
 அவர்களிடம் வட்டாட்சியர் வில்சன் தேவராஜ், டி.எஸ்.பி. பொன்னுச்சாமி, வட்டார வளர்ச்சி  அலுவலர் பட்டுராஜன் மற்றும் வனத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
   உடனடியாக லாரி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படும். ஏற்கெனவே அறிவித்தபடி பரப்பலாறு பகுதியில் தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். வனத்துறை அனுமதி பெற்று பேரிஜம் பகுதியிலிருந்து தண்ணீர் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய ஆடவா், மகளிா் ரிலே அணிகள் பாரீஸ் ஒலிபிக் போட்டிக்குத் தகுதி

சென்ட்ரல், எழும்பூா் ரயில் நிலையங்களில் தண்ணீா் தட்டுப்பாடு இல்லை: தெற்கு ரயில்வே

மகளிா் டி20: இந்தியா ஆதிக்கம்

ஆசிய குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 5 தங்கம்

ஐசிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவுகள் வெளியீடு: தோ்ச்சி விகிதம் அதிகரிப்பு

SCROLL FOR NEXT