திண்டுக்கல்

நீர் மேலாண்மை இயக்கம்: இன்று சிறப்பு கிராம சபைக் கூட்டம்

DIN

நீர் மேலாண்மை இயக்கம் குறித்து திண்டுக்கல் மாவட்டத்தின் 306 ஊராட்சிகளிலும் சனிக்கிழமை கிராம சபைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் மு.விஜயலட்சுமி வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சனிக்கிழமை முற்பகல் 11.00 மணி அளவில் நீர் மேலாண்மை இயக்கம் தொடர்பான சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. தனி அலுவலர் அல்லது வட்டார வளர்ச்சி அலுவலர் நடைபெறும் இந்த கூட்டத்தில், நீர் பாதுகாப்பு மற்றும் மழைநீர் சேகரிப்பு, நீர் நிலைகள் புதுப்பித்தல், மீள் நிரப்பு கட்டமைப்புகளை மறு பயன்பாடு செய்தல், நீர் வடிப்பகுதி மேம்பாடு, தீவிர காடு வளர்ப்பு மற்றும் குடிடிமராமத்து பணிகள் குறித்து விழிப்புணர்வு மற்றும் சமூக கல்வி மக்களிடையே ஏற்படுத்த உள்ளது.
எனவே, அந்தந்த ஊராட்சிப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், கிராம சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டு நீர் மேலாண்மை மற்றும் நீர் பாதுகாப்பு குறித்து அறிந்து கொண்டு பயன் பெற வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து கவலையில்லை: இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவர்

ரோஷினி ஹரிப்ரியன் போட்டோஷூட்

SCROLL FOR NEXT