திண்டுக்கல்

கணினி ஆசிரியர்கள் தேர்வு: 208 பேர் பங்கேற்பு

DIN

முதுகலை கணினி ஆசிரியர் பணிக்கு ஞாயிற்றுக்கிழமை முதல்முறையாக ஆன்-லைன் மூலம் நடைபெற்ற தேர்வில், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 208 பேர் பங்கேற்றனர்.
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் முதுகலை கணினி ஆசிரியர் பணிக்கான தேர்வு, தமிழகம்  முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஆசிரியர் தேர்வு வாரியத்தில் முதல்முறையாக ஆன்-லைன் மூலம் இத்தேர்வு நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 221 பேர் இத்தேர்வில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டிருந்தனர். 
இத்தேர்வுக்காக, திண்டுக்கல் முத்தனம்பட்டியிலுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த 221 பேரில் 208 பேர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT