திண்டுக்கல்

திண்டுக்கல் அருகே ரூ.2.97 லட்சம் பறிமுதல்

DIN

திண்டுக்கல் அருகே தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் வியாழக்கிழமை நடத்திய வாகனச் சோதனையில், உரிய ஆவணங்களின்றி காரில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.2.97 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
      திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அடுத்துள்ள சித்தையன்கோட்டை பிரிவு அருகே துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மனோகரன் தலைமையிலான பறக்கும் படையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வத்தலகுண்டிலிருந்து  திண்டுக்கல் நோக்கி வந்த ஒரு காரை வழிமறித்து சோதனை நடத்தினர். அதில், உரிய ஆவணங்களின்றி ரூ.2.97 லட்சம் எடுத்துச் செல்வது தெரியவந்தது. 
     அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், காரை ஓட்டி வந்தவர் தேனி மாவட்டம் சின்னமனூரைச் சேர்ந்த சிவானந்தம் (46) என்றும், கைத்தறித் துறையில் அலுவலராகப் பணியாற்றி வருவதும் தெரியவந்துள்ளது. அதையடுத்து, பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர், அதை ஆத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
     முதல் நடவடிக்கை:  மக்களவைத் தேர்தலுக்கான நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு, கடந்த திங்கள்கிழமை முதல் பறக்கும் படைகள் உருவாக்கப்பட்டு கண்காணிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் முதல்முறையாக சித்தையன்கோட்டை பிரிவு அருகே உரிய ஆவணங்களின்றி ரூ.2.97 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது 
குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

82 ஆண்டுகளுக்குப் பிறகு கோதண்டராமசுவாமி கோயில் மகாகும்பாபிஷேகம்!

காங். ஆட்சியில் தாலிக்கயிறுக்குக் கூட பாதுகாப்பில்லை -பிரதமர் மோடி கடும் தாக்கு

ரத்னம் வசூல் எவ்வளவு?

கத்தாழ கண்ணால குத்தாத...!

SCROLL FOR NEXT