திண்டுக்கல்

பழனி அருகே பெண் தற்கொலை: போலீஸார் விசாரணை

DIN

பழனி அருகே பெண் ஒருவர் வியாழக்கிழமை தற்கொலை செய்துகொண்டது சந்தேகத்துக்கு இடமளிப்பதாக உள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
       பழனியை அடுத்த வயலூரைச் சேர்ந்தவர் நித்யானந்தம். இவர், வயலூரில் ஆன்-லைன் சேவை மையம் நடத்தி வருகிறார். இவரது மனைவி வெள்ளைத்தாய் (38).  இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.
      இந்நிலையில், வியாழக்கிழமை வெள்ளைத்தாய் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சாமிநாதபுரம் போலீஸார் சென்று விசாரித்தனர்.
     அப்போது, வீட்டிலிருந்த நாள் குறிப்பேடு ஒன்றில், புஷ்பத்தூர் ஊராட்சி மன்றத் தலைவரின் சகோதரர் சின்னையன் என்கிற ரத்தினமூர்த்தி என்பவர் வீட்டில் தனியாக இருக்கும்போது தன்னை அடிக்கடி சந்தித்து பாலியல் ரீதியாக வற்புறுத்தி வந்ததாகவும், இது வீட்டுக்குத் தெரிந்தால் பிரச்னையாகிவிடும் என்பதால் தான் தற்கொலை செய்துகொண்டதாகவும், வெள்ளைத்தாய் எழுதி வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. 
     ஆனால், வெள்ளைத்தாய்க்கு எழுதப் படிக்கத் தெரியாது என்றும், அவரது கணவர் அவரை அடித்து துன்புறுத்தி வந்ததாகவும், அவரது தற்கொலையில் சந்தேகம் இருப்பதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
     இது குறித்து சாமிநாதபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சடலத்தை பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’வோட் ஜிஹாத்’: காங்கிரஸ் மீது மோடி புதிய குற்றச்சாட்டு

மொரீஷியஸில் இளையராஜா: வைரல் புகைப்படம்!

உருவகேலி செய்யாதீர்கள்: 2 ஆண்டுகளாக நோயுடன் போராடும் மலையாள நடிகை!

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

SCROLL FOR NEXT