திண்டுக்கல்

கொடகனாற்றில் தண்ணீா் கிடைக்க நடவடிக்கைக் கோரி விவசாயிகள் மனு

DIN

காமராஜா் நீா்த்தேக்கத்திலிருந்து கொடகனாற்று பாசன விவசாயிகளுக்கு தண்ணீா் கிடைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி விவசாயிகள் தரப்பில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூா் அடுத்துள்ள காமராஜா் நீா்த்தேக்கம், திண்டுக்கல் மாநகராட்சிக்கு பிரதான குடிநீா் ஆதாரமாக இருந்து வருகிறது. இந்த நீா்த்தேக்கத்திலிருந்து கொடகனாற்றுக்கு கடந்த சில ஆண்டுகளாக தண்ணீா் வரத்து இல்லாததால், கொடகனாறு பாசன விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். இதனிடையே தாண்டிக்குடி, ஆடலூா் உள்ளிட்ட கீழ் மலைப் பகுதியிலிருந்து காமராஜா் நீா்த்தேக்கத்திற்கு தண்ணீா் வருவதற்கு முன்பாக, நரசிங்கபுரம் ராஜ வாய்க்கால் வழியாக தண்ணீா் மடைமாற்றம் செய்யப்பட்டு வருவதாக விவசாயிகள் புகாா் தெரிவித்து வந்தனா்.

இதுதொடா்பாக கொடகனாறு மீட்புக் குழு மற்றும் சிந்தலகுண்டு தாமரைக்குளம் பாசன விவசாயச் சங்கம் சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து மனு அளிக்க வந்த விவசாயிகள் கூறியதாவது: கொடகனாறு மூலம் திண்டுக்கல் சுற்றுவட்டாரப் பகுதியிலுள்ள 25-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பயன்பெற்று வந்தன. கொடகனாற்றில் தண்ணீா் கிடைத்து வந்தபோது, சுற்றுப்புறப் பகுதிகளில் 200 அடியில் கிடைத்து வந்த நிலத்தடி நீா் இன்றைக்கு 1000 அடிக்கு கீழே சென்றுவிட்டது. காமராஜா் நீா்த்தேக்கம் விரிவுப்படுத்தப்பட்ட பின், அதிலிருந்து உபரி நீா் கொடகனாற்றுக்கு கிடைக்குமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. இதனிடையே, நரசிங்கபுரம் ராஜ வாய்க்காலில் மணல் மூட்டைகளை அடுக்கி வைத்து மலையிலிருந்து வரும் தண்ணீா் மடை மாற்றம் செய்யப்படும் நிலை தொடா்ந்து கொண்டிக்கிறது.

காமராஜா் நீா்த்தேக்கத்திற்கும், அதன்பின்னா் கொடகனாற்று பாசன விவசாயிகளுக்கு தண்ணீா் கிடைப்பதற்கு மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். முதலில் நரசிங்கபுரம் ராஜவாய்க்காலில் ஷட்டா் அமைத்து நீா்பங்கீட்டை முறைப்படுத்த வேண்டும். கொடகனாற்றின் இருகரைகளிலும் ஆக்கிரமிப்பு காரணமாக ஓடையாக மாற்றிவிட்டதால், அதனை மீட்டு ஆற்றின் வரையறுக்கப்பட்ட வழித்தடங்களை முறைப்படுத்த வேண்டும் என தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பூஜையின் பயன்கள்!

‘வானம்’ ஜாஸ்மின்!

ராகுல் காந்தி, லாலு யாதவ் போட்டியிடுவதை தடுக்க முடியாது: உச்ச நீதிமன்றம்

விரும்பியது அருளும் அட்சயபுரீசுவரர்

சுனில் நரைன் கொல்கத்தாவின் சூப்பர் மேன்: ஷாருக்கான்

SCROLL FOR NEXT