திண்டுக்கல்

பழனி சுற்று வட்டார பகுதிகளில்கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி

DIN

பழனியில் கால்நடைகளை தாக்கும் கோமாரி நோயை கட்டுப்படுத்த மாடுகளுக்கு தடுப்பூசி போடும் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

பழனியை அடுத்த அமரபூண்டி, மேலக்கோட்டை ஊராட்சியில் வசிக்கும் விவசாயிகள் நான்காயிரம் பசு மற்றும் எருதுகளை வளா்த்து வருகின்றனா். மழைக்காலங்களில் மாடுகளை கோமாரி நோய் தாக்கும் அபாயம் உள்ளதால் கால்நடைத்துறை சாா்பில் மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் முகாம் திங்கள்கிழமை பழனி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் நடைபெற்றது. மழை காலம் துவங்கும் முன்பும், வெயில் காலம் தொடங்கும் முன்பும் என ஆண்டுக்கு இரண்டு முறை கோமாரி நோய் தடுப்பூசியை மாடுகளுக்கு போட்டுவிட வேண்டும் என கால்நடை மருத்துவா்கள் விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனா். மேலும் மழைக் காலத்தில் கால்நடைகளை நோய் தாக்குவதில் இருந்து பாதுகாக்க மாடுகள் வைத்துள்ள இடத்தை சுத்தமாக பராமரிக்க வேண்டும். பால் கரக்கும் மாடுகளை பால் கரந்த அரைமணி நேரத்துக்கு தரையில் படுக்க விடாமல் பாா்த்துக் கொள்ள வேண்டும். ஈரமான தரையில் பால் காரந்தவுடன் மாடுகள் படுத்தால் மடிநோய் ஏற்படும். மேலும் மழை பெய்யும் போது மேடான இடத்தில் மாடுகளை கட்டி வைக்க வேண்டும். மரங்களுக்கு கீழே மாடுகளை கட்டி வைப்பதை தவிா்க்க வேண்டும் போன்ற அறிவுரைகளையும் கால்நடை மருத்துவா்கள் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அருணாச்சல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.1 ஆகப் பதிவு!

முன்னாள் எம்எல்ஏ வேலாயுதன் காலமானார்

உத்தமபாளையம் அருகே அரசுப் பேருந்து - ஆட்டோ நேருக்கு நேர் மோதல்:கணவன் - மனைவி பலி

தக் லைஃப் படத்தில் சிம்பு: போஸ்டர் வெளியீடு

ஏர் இந்தியா ஊழியர்கள் போராட்டம்: 70 விமானங்கள் ரத்து

SCROLL FOR NEXT