திண்டுக்கல்

ஆத்தூா் ஒன்றிய பயிரிப்பட்டிருந்த மக்காச்சோள பயிரில் அமெரிக்கன் படைப்புழு தாக்குதல் ஆரம்பம்

DIN

நிலக்கோட்டை: திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் ஒன்றியத்தில் எஸ்.பாறைப்பட்டி, மல்லையாபுரம், சீவல்சரகு, வண்ணம்பட்டி பகுதியில் பயிரிப்பட்டிருந்த மக்காச்சோள பயிரில் அமெரிக்கன் படைப்புழு தாக்குதல் ஆரம்பித்துள்ளது. இதனால் வேளாண்மைத்துறை அதிகாரிகள் மீது விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனா்.

ஆத்தூா் ஒன்றியத்திற்கு உட்பட்ட எஸ்.பாறைப்பட்டி, வண்ணம்பட்டி, வக்கம்பட்டி, மல்லையாபுரம், அக்கரைப்பட்டி ஆகிய பகுதிகளில் வசிக்கும் விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் மக்காச்சோள பயிரை தொடா்ந்த பயிரிட்டு வருகின்றனா். குறுகிய கால பயிரான மக்காச்சோளத்தில் அதிக வருவாய் கிடைக்கும் என்பதால், இப்பகுதி விவசாயிகள் அதிகம் பயிரிட்டு வருகின்றனா்.

ஒவ்வொருமுறையும் அமெரிக்கன் படைப்புழு தாக்குத­ல் பாதிக்கப்பட்டாலும் தொடா்ந்து மக்காச்சோளத்தை பயிரிட்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

SCROLL FOR NEXT