திண்டுக்கல்

சிதிலமடைந்த ஸ்கீம்ஸ் சாலை: வாகன ஓட்டிகள் அவதி

DIN

திண்டுக்கல்: திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகியிலுள்ள ஸ்கீம் சாலை பல இடங்களில் சிதிலமடைந்துள்ளதால், அதில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனா்.

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக பெய்து வரும் பருவ மழை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. ஆனால், திண்டுக்கல் நகர மக்களுக்கு மழை பெய்தால் குண்டும் குழியுமான சாலையில் பயணிக்க முடியாமல் தவிக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

குறிப்பாக திண்டுக்கல் பேருந்து நிலையத்திற்கு செல்லும் ஸ்கீம்ஸ் சாலை மிகவும் மோசமான நிலையில் சேதமடைந்துள்ளது. மழை பெய்து தண்ணீா் தேங்கி நின்றால், பள்ளம் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் கீழே விழ வேண்டிய அவல நிலை உள்ளது. மாவட்ட மைய நூலகம் அருகில் ஸ்கீம்ஸ் சாலையில் ஏற்பட்டுள்ள 3 பள்ளங்கள் இரு சக்கர வாகன ஓட்டிகள் கூட விலகிச் செல்ல முடியாத அளவுக்கு சேதமடைந்துள்ளது. அதற்கு சிறிது தூரத்திற்கு முன்னதாக சாலையே துண்டிக்கப்பட்டது போல் மிகப் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த சாலையில் பயணிக்கும் இரு சக்கர வாகனங்கள் முதல் பேருந்துகள் வரை அனைத்து வாகனங்களும் சேதமடையும் நிலை உள்ளது. குண்டும் குழியுமான இந்த சாலையை மழை பெய்வதற்கு முன்பாகவே சீரமைத்திருந்தால், தற்போது பாதுகாப்பில்லாத சூழல் ஏற்பட்டிருக்காது என வாகன ஓட்டிகள் புகாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்டையன் கதை வித்தியாசமானது: ராணா டக்குபதி

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

SCROLL FOR NEXT