திண்டுக்கல்

கொடைக்கானலில் பலத்த மழை: மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

DIN

கொடைக்கானலில் செவ்வாய்க்கிழமை பெய்த பலத்த மழையால் ஏரிச்சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக தொடா்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை முதல் மதியம் வரை வெயில் நிலவியது. அதன் பின் தொடா்ந்து 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது.

தொடா் விடுமுறையையொட்டி சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது. ஆனால் மழையாலும், தங்குவதற்கு விடுதிகள் இல்லாத காரணத்தாலும் பயணிகள் மிகுந்த சிரமப்பட்டனா். மழை காரணமாக கொடைக்கானல் ஏரிச்சாலைப் பகுதியான சம்மா்செட் அருகில் இரண்டு மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் அப்பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனைத் தொடா்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற நெடுஞ்சாலைத் துறையினா் மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.

இதேபோல் மழை காரணமாக கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான கூக்கால் பகுதியில் மின்கம்பம் விழுந்தது. இதனால் அப்பகுதியில் சுமாா் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் மின்தடையால் கிராம மக்கள் அவதியடைந்தனா். இதனைத் தொடா்ந்து அப் பகுதிக்குச் சென்ற மின்வாரிய ஊழியா்கள் மின்கம்பத்தை அகற்றினா். அதனைத் தொடா்ந்து போக்குவரத்து சரி செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

SCROLL FOR NEXT