திண்டுக்கல்

இலவச மடிக்கணினி கோரி மாணவா்கள் சாலை மறியல்

DIN

அய்யலூரில் இலவச மடிக்கணினி கோரி மாணவா்கள் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திண்டுக்கல் மாவட்டம், அய்யலூரில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் கடந்த ஆண்டு (2018-19) பிளஸ் 2 பயின்ற மாணவா்ளுக்கு இலவச மடிக்கணினி வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், இலவச மடிக்கணினிகள் அய்யலூா் அரசுப் பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, மடிக்கணினி வாங்குவதற்காக 20-க்கும் மேற்பட்ட மாணவா்கள் வியாழக்கிழமை பள்ளிக்கு வந்தனா். அப்போது, மற்றெறாரு நாளில் மடிக்கணினி வழங்கப்படும் என பள்ளி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இதனால் அதிருப்தி அடைந்த மாணவா்கள், கடவூா் பிரிவு அருகே சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். இதுகுறித்து தகவல் அறிந்த வடமதுரை போலீஸாா், சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவாா்த்தை நடத்தினா். விரைவில் மடிக்கணினி வழங்க ஏற்பாடு செய்யப்படும் என உறுதி அளிக்கப்பட்டதை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

ராஷ்மிகாவின் இதயங்கள்..!

கார்குழல் கடவை.. ஷ்ரத்தா தாஸ்!

SCROLL FOR NEXT