திண்டுக்கல்

ஆசிரியர் போட்டித் தேர்வு 2 ஆவது நாளாக திண்டுக்கல் மாவட்டத்தில் 1,449 பேர் பங்கேற்பு

DIN


திண்டுக்கல் மாவட்டத்தில் 5 மையங்களில் நடைபெற்ற ஆசிரியர் போட்டித் தேர்வில் 1,449 பேர் வெள்ளிக்கிழமை பங்கேற்றனர்.
 தமிழகத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,144 முதுநிலை ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு நடைபெற்று வருகிறது.  அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் 5 தனியார் பொறியியல் கல்லூரிகளில் கணினி வழியில் சனிக்கிழமை தேர்வுகள் நடைபெற்றன. 
முற்பகல் தேர்வில் 903 பேர், பிற்பகல் தேர்வில் 902 பேர் என 1,805 பேர் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முற்பகலில் நடைபெற்ற தேர்வில் 768 பேர், பிற்பகல் தேர்வில் 681 பேர் என மொத்தம் 1,449 பேர் மட்டுமே பங்கேற்றனர். 356 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை. 
 தேர்வு நடைபெற்ற மையங்களில், பள்ளி கல்வி இணை இயக்குநர்(இடைநிலை) ச.கோபிதாஸ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சே.மணிவண்ணன், மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆகியோர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

SCROLL FOR NEXT