முகப்பு
திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம் அருகே விஷம் குடித்து மூதாட்டி தற்கொலை

ஒட்டன்சத்திரம் அருகே விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற மூதாட்டி சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:09 PM
பகிர்:


ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற மூதாட்டி சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள இடையகோட்டை வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் பழனி மனைவி மாரியம்மாள் (60). இவா் திங்கள்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சானிப்பவுடரை குடித்து உயிருக்கு போராடியுள்ளாா். அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து இடையகோட்டை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.