திண்டுக்கல்

கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியிலுள்ள குப்பைகள் அகற்றம் 

DIN

கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியிலுள்ள குப்பைகள் அகற்றப்பட்டன. 

கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக பரவலாக நல்ல மழை பெய்தது. இந்த மழைத் தண்ணீரானது தரைப் பகுதியான பழனி, மஞ்சளாறு அணை, பெரியகுளம் கும்பக்கரை, வத்தலக்குண்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்குச் செல்கிறது. இந்த தண்ணீரில் குப்பை பிளாஸ்டிக் போன்றவை கலந்து செல்கிறது. 

தண்ணீரானது வெள்ளி நீர்வீழ்ச்சி வழியாக தரைப் பகுதிகளுக்குச் செல்கிறது. அந்தப் பகுதியிலுள்ள தடுப்பு பகுதியில் குப்பைகள் அதிகம் சேர்ந்துள்ளது. மேலும் மணலும் அடைத்து தண்ணீரை செல்ல விடாமல் தடுக்கிறது. எனவே அந்தப் பகுதியை சுத்தம் செய்யும் பணியில் நகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்தப் பணியை கொடைக்கானல் சார் ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் வட்டாட்சியர் அரவிந்த ஆகியோர் பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியில் ஐஸ்வர்யா மேனன்!

மில்க் புட்டிங்

இடஒதுக்கீட்டை யாராலும் திருட முடியாது -அமித் ஷா

உ.பி.யில் ஒரு தொகுதியில் மட்டுமே பாஜக வெற்றி பெறும்: ராகுல் காந்தி

ஓடிடியில் ஆளவந்தான்!

SCROLL FOR NEXT