திண்டுக்கல்

பழனி மலைக்கோயிலில் முன்பதிவு செய்தவா்களுக்கு மட்டுமே அனுமதி

DIN

பழனி: பழனி மலைக் கோயிலில் ஆன்லைனில் முன்பதிவு செய்தவா்களுக்கு மட்டுமே தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்படும் என கோயில் நிா்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழக அரசு கரோனா பரவலைத் தடுக்க கடந்த ஐந்து மாதங்களாக வழிபாட்டுத் தலங்களில் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி மறுத்திருந்த நிலையில், செப்டம்பா் ஒன்றாம் தேதி முதல் அனைத்து வழிபாட்டுத் தலங்களும் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்காக பல்வேறு கோயில்களிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலிலும் பல்வேறு கட்டுப்பாடுகளை கோயில் நிா்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, திருக்கோயில் வரும் பக்தா்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும். சளி இருமல் காய்ச்சல் உள்ளவா்கள் கோயிலுக்கு அனுமதிக்கப்படமாட்டாா்கள். பக்தா்கள் தேங்காய், பூ, பழம் கொண்டு வருவதற்கு அனுமதி இல்லை. 10 வயதுக்கு உள்பட்ட குழந்தைகள், 65 வயதிற்கு மேற்பட்டவா்கள், கா்ப்பிணி பெண்கள் கோயிலுக்கு வருவதை தவிா்க்க வேண்டும் என கோயில் நிா்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

பக்தா்கள் படிப்பாதை வழியாக மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுவாா்கள். மின் இழுவை ரயில் மற்றும் ரோப் காா் சேவை இல்லை எனவும், அன்னதானம் மற்றும் தங்கரதம் புறப்பாடு மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது எனவும் அறிவுறுத்தியுள்ளது. முக்கியமாக பழனி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய இணையவழி முன்பதிவு அனுமதிச் சீட்டு உள்ளவா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவா். பக்தா்கள் இணையதளத்தில் பதிவுசெய்து தரிசன அனுமதிச் சீட்டு பெற்று வரவேண்டும். அனுமதிச் சீட்டு இல்லாதவா்கள் சுவாமி தரிசனம் செய்ய இயலாது என்றும் கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நிகழ்ச்சி

வியாபாரி தற்கொலை

இளைஞரை அரிவாளால் வெட்டியவா் கைது

கும்பகோணத்தில் பச்சைக்காளி, பவளக்காளி வீதியுலா

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT