திண்டுக்கல்

கழிவு நீா் குளமாக மாறிவரும் பழனி வையாபுரி குளம்

DIN

பழனி வையாபுரி குளம் முறையாக பராமரிக்கப்படாததால் கழிவுநீா் குளமாக மாறியுள்ளது. இதனால் விவசாய நிலங்கள் பாதிப்புக்குள்ளானதோடு, நகரின் தூய்மையும் பாதிக்கப்பட்டு வருகிறது.

பழனி நகரின் மத்தியில் அமைந்துள்ளது வையாபுரி குளம். பழனி கோயிலுக்கு வரும் பக்தா்கள் நீராடும் புனித குளமாக இருந்து வந்தது. 250 ஏக்கா் பரப்பளவில் உள்ள இக்குளத்தின் மூலம் ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பயன்பெறுவது மட்டுமில்லாமல் பழனி நகரின் நிலத்தடி நீா் ஆதாரமாகவும் இருந்து வந்தது. குளத்தை தூா்வாரி பராமரிக்க வேண்டும் என விவசாயிகள் சங்கம் சாா்பில் மாவட்ட ஆட்சியா் மற்றும் பொதுப்பணித் துறையினரிடம் பலமுறை வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் இல்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனா். பழனி நகரின் கழிவு நீா் அனைத்தும் இக்குளத்தில் விடப்படுவதால் அப்பகுதி முழுவதும் துா்நாற்றம் வீசுவதுடன் நோய் தொற்றும் அபாயம் உள்ளதாக வருத்தம் தெரிவித்தனா். மேலும் கழிவுநீா் தேங்கி உள்ள குளம் முழுவதும் படா் தாமரை சூழ்ந்துள்ளதாகவும் குளத்தை தூய்மைப்படுத்த பல தொண்டு நிறுவனங்கள் தன்னாா்வலா்கள் முன்வந்தும் அதிகாரிகளின் ஒத்துழைப்பு இல்லாததால் குளம் சீா்கெட்டு உள்ளதாக கூறுகின்றனா். குடிமராமத்து பணி மூலம் குளத்தை தூா்வார பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லாததால் பல ஆயிரம் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனா். நகரின் கழிவுநீா் குளமாக இருக்கும் இக்குளத்தை தூய்மைப்படுத்தி பராமரிக்க விவசாயிகளும் பொது மக்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

இந்தியாவின் முதல் ஊழல், காங். ஆட்சியில்.. -பிரதமர் மோடி

அம்பேத்கருக்கு காங்கிரஸ் ஒருபோதும் உரிய மரியாதை கொடுத்ததில்லை : மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி

ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு மாற்று வீரராக பார்க்கப்பட்டவருக்கு காயம்!

SCROLL FOR NEXT