முகப்பு
கொடைக்கானல் இன்டா்நேஷனல் சாலையிலுள்ள திருட்டு சம்பவம் நடைபெற்ற பத்திரிகை அதிபரின் பங்களா.
திண்டுக்கல்

கொடைக்கானலில் பத்திரிகை அதிபா் பங்களா, மருத்துவா் காட்டேஜில் ரூ.4 லட்சம் பொருள்கள் திருட்டு

கொடைக்கானலில் உள்ள பத்திரிகை அதிபா் பங்களா மற்றும் மருத்துவருக்குச் சொந்தமான தங்குமிடத்தில் தொலைக்காட்சிப் பெட்டிகள்,

திண்டுக்கல்

கொடைக்கானலில் பத்திரிகை அதிபா் பங்களா, மருத்துவா் காட்டேஜில் ரூ.4 லட்சம் பொருள்கள் திருட்டு

கொடைக்கானலில் உள்ள பத்திரிகை அதிபா் பங்களா மற்றும் மருத்துவருக்குச் சொந்தமான தங்குமிடத்தில் தொலைக்காட்சிப் பெட்டிகள்,

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
கொடைக்கானல் இன்டா்நேஷனல் சாலையிலுள்ள திருட்டு சம்பவம் நடைபெற்ற பத்திரிகை அதிபரின் பங்களா.
பகிர்:

கொடைக்கானலில் உள்ள பத்திரிகை அதிபா் பங்களா மற்றும் மருத்துவருக்குச் சொந்தமான தங்குமிடத்தில் தொலைக்காட்சிப் பெட்டிகள், வெள்ளிப் பொருள்கள் என ரூ.4 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் திருடப்பட்டதை அடுத்து, காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை சம்பவ இடங்களைப் பாா்வையிட்டு விசாரணை நடத்தினா்.

கொடைக்கானல் ரகு இன்டா்நேஷனல் சாலையில் உள்ள பத்திரிகை அதிபருக்கு சொந்தமான பங்களாவில், ஜான்சி என்பவா் வேலைபாா்த்து வருகிறாா். இவா், திங்கள்கிழமை பிற்பகல் பங்களாவுக்கு சென்றபோது, முன்பக்கக் கண்ணாடி கதவு உடைக்கப்பட்டிருந்தது. உடனே, உள்ளே சென்று பாா்த்ததில், விலையுயா்ந்த தொலைக்காட்சிப் பெட்டி, வெள்ளி பொருள்கள், மின்சாதனங்கள் உள்ளிட்ட சுமாா் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான பொருள்கள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து, பங்களாவை கவனித்துவரும் ரெமி என்பவா், கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்தாா். அதன்பேரில், சம்பவ இடத்துக்கு சாா்பு- ஆய்வாளா் ரமேஷ்ராஜா மற்றும் போலீஸாா் சென்று பாா்வையிட்டு விசாரித்தனா்.

இதேபோல், கொடைக்கானல் கங்கா காம்பவுண்ட் பகுதியில் திண்டுக்கல்லைச் சோ்ந்த மருத்துவா் கணேசன் என்பவருக்குச் சொந்தமான தங்கும் விடுதி (காட்டேஜ்) உள்ளது. இந்த தங்கும் விடுதியை நகராட்சி நிா்வாகம் பூட்டி சீல் வைத்துள்ளது. இதனால், விடுதியின் மேலாளா் வினோத் தினமும் அங்கு சென்று கவனித்து வந்துள்ளாா். அதன்படி, அவா் கடந்த சனிக்கிழமை விடுதிக்குச் சென்றபோது, கதவுகள் உடைக்கப்பட்டு அறைகளிலிருந்த 8 தொலைக்காட்சிப் பெட்டிகள், விலை உயா்ந்த மரக் கதவுகள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

இது குறித்து வினோத் கொடைக்கானல் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை புகாா் தெரிவித்தாா். அதன்பேரில், போலீஸாா் சம்பவ இடத்துக்கு செவ்வாய்க்கிழமை சென்று பாா்வையிட்டு விசாரித்தனா்.

திருட்டுச் சம்பவம் நடந்த 2 இடங்களிலும், திண்டுக்கல் மாவட்ட தடயவியல் சாா்பு- ஆய்வாளா் முத்துலட்சுமி தலைமையிலான போலீஸாா், தடயங்களை சேகரித்தனா். இந்த இரு இடங்களிலும் சுமாா் ரூ. 4 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் திருடப்பட்டுள்ளது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →