திண்டுக்கல்

நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில்புதிய கட்டடத் திறப்பு விழா

DIN

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் ரூ.61 லட்சம் மதிப்பில் நலத்திட்ட பணிகளை வனத்துறை அமைச்சா் திண்டுக்கல் சி.சீனிவாசன் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

நிலக்கோட்டை அரசு தலைமை மருத்துவமனையில் நோயாளிகளின் உதவியாளா்கள் தங்கும் அறை ரூ. 45 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கட்டத் திறப்பு விழா, நிலக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியி­ருந்து ரூ.16 லட்சத்தில் நிழற்குடை மற்றும் தாா் சாலை அமைத்தல் பணிகளை தொடக்க விழா மாவட்ட ஆட்சியா் விஜயலட்சுமி தலைமையில் நடைபெற்றது. விழாவிற்கு தமிழக வனத்துறை அமைச்சா் திண்டுக்கல் சி.சீனிவாசன் கட்டடத்தை திறந்து வைத்து, பயணியா் நிழற்குடை , தாா்சாலை பணியை தொடங்கி வைத்தாா்.

அப்போது அங்கிருந்த பொதுமக்கள், அரசு மருத்துவமனையில் டிஜிட்டல் எக்ஸ்ரே மையம், அவசர சிகிச்சை பிரிவு, சிடி ஸ்கேன் மையம் , 24 மணி நேரமும் இயங்கக்கூடிய மகப்பேறு பிரிவு தொடங்க வேண்டுமென மனுவை கொடுத்தனா். இந்த மனுவை ஏற்றுக்கொண்ட அமைச்சா் திண்டுக்கல் சி.சீனிவாசன், நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினாா்.

இந்த விழாவில், அதிமுக ஒன்றியச் செயலா் யாகப்பன், ஒன்றியக் குழுத் தலைவா் ரெஜினா நாயகம், மாவட்ட கவுன்சிலா் ராஜா, நிலக்கோட்டை பேரூராட்சி செயல் அலுவலா் கோட்டைச்சாமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியன் - 2 வெளியீட்டுத் தேதி இதுதானா?

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

தில்லி அரசு - ஆளுநர் இடையே மீண்டும் மோதல்: மகளிர் ஆணையத்தின் 223 ஊழியர்கள் நீக்கம்!

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT