திண்டுக்கல்

தொழில்கடன் உதவி பெற விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா்

DIN

திண்டுக்கல்: தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் தொழில் கடனுதவி பெற தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மு. விஜயலட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இத்திட்டத்தின்கீழ் பயன் பெற பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் இனத்தவராகவும், ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்துக்கு மிகாமலும், விண்ணப்பதாரா் 18 முதல் 60 வயதுக்குள்பட்டவராகவும் இருக்க வேண்டும். குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும். பொதுகால கடன் திட்டம் அல்லது தனிநபா் கடன் திட்டம் மூலம் அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு 6 முதல் 8 சதவீதம் வரை வட்டி செலுத்த வேண்டும்.

பெண்களுக்கான புதிய பொற்கால கடன் திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ரூ .2 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படும். சிறுகடன் வழங்கும் திட்டத்தின் கீழ் சுய உதவிக்குழு மகளிா் உறுப்பினா் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ. 1 லட்சம் வரையிலும், குழுவுக்கு அதிகபட்சமாக ரூ. 15 லட்சம் வரையிலும் வழங்கப்படும்.

சிறு கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் சுய உதவிக்குழுவில் உறுப்பினராக உள்ள ஆண்களுக்கு அதிகபட்சமாக ரூ. 1 லட்சம் வரையிலும், குழுவுக்கு அதிகபட்சமாக ரூ. 15 லட்சம் வரையிலும் வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்களை அந்தந்த பகுதிகளில் உள்ள கூட்டுறவு வங்கி கிளைகளில் பெற்றுக்கொள்ளலாம்.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட கூட்டுறவு வங்கியில் ஒப்படைத்து பயன்பெறலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்ஸ்டாவில் பகிராமல் கழித்த படங்கள்! சாக்க்ஷி மாலிக்...

பத்திரிகை சுதந்திர நாள்- முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

பூஜையின் பயன்கள்!

‘வானம்’ ஜாஸ்மின்!

ராகுல் காந்தி, லாலு யாதவ் போட்டியிடுவதை தடுக்க முடியாது: உச்ச நீதிமன்றம்

SCROLL FOR NEXT