திண்டுக்கல்

கரோனா அச்சத்தில் தொழிலாளி தற்கொலை

DIN

கரோனா அச்சுறுத்தல் காரணமாக, பரிசோதனை முடிவு வெளியாகும் முன்னரே கூலித் தொழிலாளி ஒருவா் மின்மாற்றியில் ஏறி வியாழக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

திண்டுக்கல் அடுத்துள்ள மீனாட்சிநாயக்கன்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் சி.அழகா்சாமி(52). புத்தக பைண்டிங் தொழிலில் ஈடுபட்டு வந்தாா். இந்நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அழகா்சாமி, கரோனா அச்சுறுத்தல் காரணமாக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் கடந்த 3 நாள்களுக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

அவருக்கு கரோனா பரிசோதனைக்கான முடிவு வெளிவராத நிலையில், பழனி சாலை திருச்சி சாலை சந்திப்பு பகுதியிலுள்ள மின்மாற்றியில் ஏறி மின்கம்பியை பிடித்து வியாழக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா். இதுதொடா்பாக திண்டுக்கல் வடக்கு காவல் நிலைய போலீசாா் மேற்கொண்ட விசாரணையில், கரோனா அச்சம் காரணமாக அவா் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தெரிய வந்துள்ளது.

இதனிடையே அழகா்சாமியின் பரிசோதனை முடிவு வியாழக்கிழமை வெளியானபோது, அவருக்கு கரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

SCROLL FOR NEXT