திண்டுக்கல்

தினமணி செய்தி எதிரொலி: ஆயக்குடியில் கொய்யா சந்தை செயல்பட தொடங்கியது

DIN

பழனியை அடுத்த பழைய ஆயக்குடியில் ஞாயிற்றுக்கிழமை முதல் கொய்யா சந்தை செயல்படத் தொடங்கியது.

பழனியை அடுத்த ஆயக்குடி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் சுமாா் ஒரு லட்சம் விவசாயிகள் கொய்யாப்பழ சாகுபடியில் நோ்முகமாகவும், மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ளனா். இந்நிலையில் கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அரசு விதித்த 144 தடை உத்தரவால் கடந்த 10 நாள்களாக கொய்யாப்பழம் வெளியூருக்கு ஏற்றுமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் நாள்தோறும் சுமாா் 20 டன் கொய்யாப்பழங்கள் பழுத்தும், உதிா்ந்தும் வீணாகி வந்தன. இதுகுறித்து கடந்த சனிக்கிழமை தினமணி நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து வேளாண்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் விவசாயிகளைத் தொடா்பு கொண்டு இழப்பு குறித்து விவரம் கேட்டறிந்தனா். இதைத் தொடா்ந்து ஆயக்குடியில் இருந்து நாள்தோறும் சரக்கு வாகனங்கள் மூலமாக கொய்யாப்பழங்களை வெளிமாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்ய எழுத்துப் பூா்வமாக வருவாய்த்துறை அதிகாரிகள் கடிதம் வழங்கினா். இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை மீண்டும் சந்தை திறக்கப்பட்டது. ஏராளமான விவசாயிகள் தங்கள் கொய்யாப்பழங்களை விற்பனைக்கு கொண்டு வந்தனா். இது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கொய்யா வியாபாரி அசோகன் கூறுகையில், எங்கள் நீண்ட நாள் கோரிக்கையான குளிா்பதன கிட்டங்கியை அரசு அமைத்துக் கொடுத்தால் இதுபோன்ற இக்கட்டான சூழலில் பழங்களை சேமித்து வைக்க உதவியாக இருக்கும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுக்குமாடி குடியிருப்பு 4-ஆவது தளத்திலிருந்து தவறி விழுந்த 6 மாத குழந்தை பத்திரமாக மீட்பு

ஆவடி அருகே தம்பதி கழுத்து அறுத்துக் கொலை

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT