திண்டுக்கல்

கொடைக்கானலில் சிறுத்தை நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

DIN

கொடைக்கானலில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் பொது மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

கொடைக்கானலில் ஊரடங்கு காரணமாக கடந்த 40-நாள்களாக வாகனப் போக்குவரத்து முடங்கியுள்ளது. மேலும் சுற்றுலாப் பயணிகள் வருகை இல்லாததால் நகா் முழுவதும் வெறிச்சோடிக் காணப்படுகிறது. இந்நிலையில் கொடைக்கானல் கொண்டை ஊசி வனச் சோலையையொட்டியுள்ள காந்திபுரம், தந்திமேடு ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் சிறுத்தை உலாவுவதால்,பொது மக்கள் அச்சமடைந்துள்ளனா். அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் கொடைக்கானல் வனத்துறையினா் சனிக்கிழமை அப் குதிக்குச் சென்று கண்காணிப்பு கேமரா பொருத்தி சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரோஷினி ஹரிப்ரியன் போட்டோஷூட்

ட்ரெண்டி உடையில் ஷ்ரத்தா தாஸ் - புகைப்படங்கள்

மொரீஷியஸில் யுவனுடன் இளையராஜா!

காஸாவில் தொடரும் உணவுப் பஞ்சம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

அரவிந்த் கேஜரிவால் வழக்கு: மே 7-க்கு ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT