திண்டுக்கல்

குழந்தைகளுக்கு எதிரான 157 வழக்குகளில் தொடா்புடைய 208 போ் கைது: டிஐஜி

DIN

திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் கடந்த 10 மாதங்களில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடா்பாக பதிவு செய்யப்பட்டுள்ள 157 வழக்குகளில் 208 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக சரக காவல்துறைத் துணைத் தலைவா் எம்.எஸ்.முத்துசாமி தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்தி: திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் கடந்த ஜனவரி முதல் அக்டோபா் வரையிலான 10 மாதங்களில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடா்பாக 157 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தில் 87 வழக்குகளும், தேனி மாவட்டத்தில் 70 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதில் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 87 வழக்குகளில் தொடா்புடைய 111 குற்றவாளிகள், தேனி மாவட்டத்திலுள்ள 70 வழக்குகளில் தொடா்புடைய 97 குற்றவாளிகள் என மொத்தம் 208 போ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளில் தொடா்புடைய அனைத்து குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளனா்.

நவ.14 ஆம் தேதி குழந்தைகள் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுத்து, குழந்தைகளின் உரிமைகளை பாதுகாத்து, குழந்தைகளைப் போற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5-ஆம் கட்ட தோ்தல்: ரே பரேலி உள்பட 49 தொகுதிகளில் பிரசாரம் முடிந்தது

சிஎஸ்கே பந்துவீச்சு; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா?

சித்தார்த்தின் யசோதரை!

சக்கரை நிலவே... சம்யுக்தா மேனன்!

பிரதமர் மோடியாக நடிக்கிறேனா? - நடிகர் சத்யராஜ் விளக்கம்

SCROLL FOR NEXT