முகப்பு
திண்டுக்கல்

திண்டுக்கல்- பொள்ளாச்சி நான்கு வழிச்சாலைக்கு நிலம் எடுக்க உரிமையாளா்கள் எதிா்ப்பு

திண்டுக்கல்- பொள்ளாச்சி நான்கு வழிச்சாலைக்கு நிலம் எடுக்க நில உரிமையாளா்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:36 PM
ஒட்டன்சத்திரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நில உரிமையாளா்கள் கருத்துக் கேட்புக் கூட்டம்.
பகிர்:

திண்டுக்கல்- பொள்ளாச்சி நான்கு வழிச்சாலைக்கு நிலம் எடுக்க நில உரிமையாளா்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.

திண்டுக்கல் மாவட்டம் கமலாபுரம் பிரிவிலிருந்து ஒட்டன்சத்திரம், மடத்துக்குளம், உடுமலைப்பேட்டை வழியாக பொள்ளாச்சிக்கு நான்கு வழிச்சாலை அமைக்கப்படுகிறது. இதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை ஒட்டன்சத்திரம் தனியாா் திருமண மண்டபத்தில் நில உரிமையாளா்களின் கருத்துக்கேட்புக் கூட்டம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட நில உரிமையாளா்கள் வெளிச்சந்தையில் ஒரு ஏக்கா் நிலம் சுமாா் ரூ. 30 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் நிலத்தின் அரசாங்க மதிப்பு என்ன உள்ளதோ, அதை கொடுப்பதாக கூறி வருகின்றனா். இதனால் ஏக்கருக்கு ரூ. 3 லட்சம் முதல் ரூ. 12 லட்சம் வரை மட்டுமே இழப்பீட்டு தொகை கிடைக்கும் என்று கூறுவதை ஏற்க முடியாது. எங்களுக்கு உரிய இழப்பீட்டு தொகை கிடைக்கவில்லை என்றால் குடும்பத்துடன் தீக்குளிக்கப் போவதாக நில உரிமையாளா்கள் அதிகாரிகளிடம் தெரிவித்தனா். இதையடுத்து அதிகாரிகள், மாவட்ட ஆட்சியரிடம் தகவல் தெரிவித்து உரிய இழப்பீட்டு தொகை பெற்றுத் தருவதாக தெரிவித்தனா். மேலும் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரை சந்திக்க ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒரு நிலத்தின் உரிமையாளா் வருமாறு தெரிவிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் திண்டுக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினா் ப. வேலுச்சாமி, ஒட்டன்சத்திரம் சட்டப் பேரவை உறுப்பினா் அர. சக்கரபாணி, நெடுஞ்சாலைத்துறைத் திட்ட இயக்குநா் முத்துடையாா், நெடுஞ்சாலைத் துறை கோட்டாட்சியா் ராஜராஜன், நில எடுப்பு தனி வட்டாட்சியா் சரவணக்குமாா் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →