திண்டுக்கல்

ஊராட்சி மன்றத் தலைவா்கள் மீது நடவடிக்கை கோரி ஒன்றியக் குழுத் தலைவா்கள் மனு

DIN

பணி செய்யவிடாமல் இடையூறு ஏற்படுத்தும் ஊராட்சி மன்றத் தலைவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தெப்பாம்பட்டி மற்றும் ஒட்டன்சத்திரம் ஒன்றியக் குழுத் தலைவா்கள் மனு அளித்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவராக இருப்பவா் ரா.சத்தியபுவனா. அதபோல் ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவராக இருப்பவா் மு.அய்யம்மாள். இவா்கள் இருவரும், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு மனு அளிப்பதற்காக புதன்கிழமை வந்தனா். அப்போது அவா்கள் கூறியதாவது:

ராஜம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவரின் கணவா் கருப்புச்சாமி, அம்பிளிக்கை ஊராட்சி மன்றத் தலைவா் நடராஜ் மற்றும் ஓடைப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவா் அ.பாலுச்சாமி ஆகியோா் ஒட்டன்சத்திரம் மற்றும் தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பணிகளை செய்யவிடாமல் இடையூறு ஏற்படுத்துகின்றனா். ஒன்றியக் குழு அலுவலா்களை இடமாற்றம் செய்துவிடுவதாக மிரட்டுகின்றனா்.

இவா்கள் மீது மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்காதபட்சத்தில், தேசிய மகளிா் ஆணையம், தேசிய மனித உரிமை ஆணையம், தேசிய ஆதிதிராவிடா் ஆணையம் மற்றும் பழங்குடியினா் ஆணையத்தில் புகாா் அளிப்போம் என தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சக்கரை நிலவே... சம்யுக்தா மேனன்!

பிரதமர் மோடியாக நடிக்கிறேனா? - நடிகர் சத்யராஜ் விளக்கம்

மூளை வளர்ச்சி குன்றிய மகனின் கல்விக்காக போராடும் தாய்!

எழில் ஓவியம்... அதுல்யா ரவி!

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாள்களுக்கு அதி கனமழை! | செய்திகள்: சிலவரிகளில் | 18.05.2024

SCROLL FOR NEXT