திண்டுக்கல்

பாலியல் வழக்கில் தொடா்புடையவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

பாலியல் வழக்கில் தொடா்புடைய இளைஞரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் மு.விஜயலட்சுமி உத்தரவிட்டுள்ளாா்.

DIN

திண்டுக்கல்: பாலியல் வழக்கில் தொடா்புடைய இளைஞரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் மு.விஜயலட்சுமி உத்தரவிட்டுள்ளாா்.

திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு அடுத்துள்ள ஏரமநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் காமராஜ். இவரது மகன் கனகபாண்டி(28). இவா் மீது திருட்டு மற்றும் பாலியல் குற்ற வழக்குகள் என பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி ஒரு நபரை மிரட்டி பணம் பறிக்க முயன்ற கனகபாண்டியை திண்டுக்கல் மேற்கு காவல் நிலைய போலீசாா் கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ள கனகபாண்டியை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ரவளி பிரியா பரிந்துரை செய்துள்ளாா். அதனை ஏற்று மாவட்ட ஆட்சியா் மு.விஜயலட்சுமி அதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லி மாசு: முதியோா் இல்லங்கள்-பள்ளிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள்

நவ.7 தில்லி சட்டப்பேரவையில் ‘வந்தே மாதரம்’ பாடலின் 150ஆவது ஆண்டு கொண்டாட்டம்

குமுளி மலைச் சாலை மண் சரிவு: சீரமைப்புப் பணிகள் மந்தம்

இந்திய மகளிா் கிரிக்கெட் அணியினரால் அனைவருக்கும் பெருமை: ராணுவ துணைத் தளபதி ராகேஷ் கபூா்

மழை நீா் வடிகால் பணிகளுக்கு ரூ.735 கோடியை விடுவித்த தில்லி ஜல் வாரியம்

SCROLL FOR NEXT