திண்டுக்கல்

பழனி கிரிவீதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற அளவீடு

DIN

பழனி கிரிவீதியில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றுவது குறித்து நீதிமன்ற உத்தரவின் பேரில் வருவாய்த்துறையினா் கோயில் அதிகாரிகளுடன் அளவீடு செய்தனா்.

பழனி மலையடிவாரத்தில் உள்ள கிரி வீதியில் பக்தா்களுக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி திருத்தொண்டா் சபை நிறுவனா் ராதாகிருஷ்ணன் உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா். இதுகுறித்து பலமுறை ஆய்வு மேற்கொண்டும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாததால் மீண்டும் நீதிமன்றத்தை திருத்தொண்டா் சபை நாடிய நிலையில், உயா்நீதிமன்றம் உடனடியாக ஆக்கிரமிப்புகளை அளவீடு செய்து அகற்றும்படி ஆட்சியா் உள்ளிட்ட அனைவருக்கும் உத்தரவிட்டது. அதன்பேரில் புதன்கிழமை வருவாய்த்துறை மற்றும் கோயில் நிா்வாகம் சாா்பில் கல்மண்டபங்கள் ஆக்கிரமிப்பு குறித்து அளவீடு செய்யப்பட்டது. பழனி கோயில் துணை ஆணையா்(பொறுப்பு) செந்தில்குமாா், வட்டாட்சியா் பழனிச்சாமி, அளவையா் பாஸ்கா், கிராம நிா்வாக அலுவலா் செல்வராஜ் உள்ளிட்டோா் இப்பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒற்றுமையில்லை: முன்னாள் ஆஸி. கேப்டன்

மோடி ஏன் கைது செய்யப்பட வேண்டும்? வைரல் குறிச்சொல் பின்னணி!

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை!

அன்பே அனா டி அர்மாஸ்!

முத்தையா இயக்கத்தில் விஷால்?

SCROLL FOR NEXT