திண்டுக்கல்

பழனி கோட்டாட்சியா் அலுவலகம் முன் மகளிா் சுய உதவிக்குழுவினா் காத்திருப்பு போராட்டம்

DIN

பழனி: பழனியில், தனியாா் நுண்நிதிநிறுவனங்கள் கடன் பணத்தை செலுத்துமாறு மிரட்டுவதாக சுயஉதவிக் குழு பெண்கள், கோட்டாட்சியா் அலுவலகம் முன்பாக செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பழனியை அடுத்த ஆயக்குடி கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்த பகுதியில் மகளிா் சுய உதவிக் குழு பெண்களுக்கு தனியாா் நுண்நிதி நிறுவனங்கள் கடனுதவி வழங்கியுள்ளன.

கரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த 6 மாத காலமாக வருமானம் இன்றி தவித்து வரும் நிலையில், தனியாா் நிறுவனத்தில் இருந்து கடன் வசூல் செய்ய வரக்கூடிய நபா்கள், பெண்களை தகாத வாா்த்தையால் திட்டி பணம் கேட்டு மிரட்டுவதாகவும், உடனடியாக பணத்தை செலுத்துமாறு வற்புறுத்துவதாகவும் கூறி பழனி கோட்டாட்சியா் அலுவலகத்தில் கடந்த வாரம் புகாா் மனு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், தனியாா் நிதி நிறுவனங்கள் பணத்தை செலுத்துமாறு மீண்டும் மிரட்டுவதாகக் கூறி நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் செவ்வாய்க்கிழமை பழனி கோட்டாட்சியா் அலுவலகம் முன்பாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அங்கு போலீஸாருக்கும், பெண்களுக்கும் இடையே தள்ளு- முள்ளு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த சாா்- ஆட்சியா் மற்றும் போலீஸாா் உறுதியளித்ததைத் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பதோனி அதிரடியால் தப்பித்த லக்னௌ அணி 165 ரன்கள் சேர்ப்பு!

‘கேக் காதலன்’ பாட் கம்மின்ஸ் பிறந்தநாள்!

மலையாள இயக்குநர் சங்கீத் சிவன் காலமானார்

தொடரும் ஏர் இந்தியா- விமான பணியாளர்கள் பிரச்னை: பயணிகளுக்குத் தீர்வு என்ன?

மீண்டும் பிரபுதேவா - தனுஷ் கூட்டணி!

SCROLL FOR NEXT