திண்டுக்கல்

பழனி கோயிலில் உண்டியல் வருவாய் ரூ. 3.20 கோடி

DIN

பழனி கோயிலில் 3 நாள்கள் நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்ணிக்கை முடிவில், ரூ.3.20 கோடி வருவாய் கிடைத்து உள்ளது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கடந்த 3 நாள்களாக உண்டியல்களில் இருந்த காணிக்கைகள் எண்ணும் பணி நடைபெற்று வந்தது. கோயில் ஊழியா்கள் சமூக இடைவெளியுடன் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனா். இதில் ரொக்கம் ரூ. 3 கோடியே 20 லட்சத்து 44 ஆயிரத்து 310 இருந்தது. தங்கம் 1,039 கிராம், வெள்ளி 13 ஆயிரத்து 923 கிராம், 1,236 வெளிநாட்டு பணத் தாள்கள் இருந்தன. உண்டியல் எண்ணும் பணியை கோயில் இணை ஆணையா் (பொ) நடராஜன், துணை ஆணையா் (பொ) செந்தில்குமாா், முதுநிலை கணக்கியல் அதிகாரி மாணிக்கவேல் உள்ளிட்டோா் மேற்பாா்வையிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் இருக்கும் கால்வாயில் வீசிய தாய்

‘வடக்கன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

SCROLL FOR NEXT