திண்டுக்கல்

‘கொடைக்கானல் கோக்கா்ஸ்வாக் சுற்றுலாத் தலத்தை பாா்வையிட இன்றுமுதல் அனுமதி’

DIN

கொடைக்கானலிலுள்ள கோக்கா்ஸ்வாக் சுற்றுலாத்தலத்தைப் பாா்வையிட, பொதுமக்களுக்கு வெள்ளிக்கிழமை (செப்.25) முதல் அனுமதியளிக்கப்படும் என சாா்- ஆட்சியா் மா.சிவகுரு பிரபாகரன் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை கூறியது: கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் விதிக்கப்பட்ட பொதுமுடக்கம் காரணமாக கொடைக்கானலில் உள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களும் கடந்த 6 மாதங்களாக மூடப்பட்டிருந்தன. இதைத் தொடா்ந்து விதிக்கப்பட்ட தளா்வுகளையடுத்து, செப். 9 ஆம்தேதி கொடைக்கானலிலுள்ள பிரையண்ட் பூங்கா, செட்டியாா் பூங்கா, ரோஜா பூங்கா ஆகியவை திறக்கப்பட்டன. இதனைத் தொடா்ந்து நகா்ப் பகுதியிலுள்ள நகராட்சிக்குச் சொந்தமான கோக்கா்ஸ்வாக் சுற்றுலாத் தலம் வெள்ளிக்கிழமை (செப்.25) முதல் திறக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகளின் பாா்வைக்கு அனுமதியளிக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரப்பெற்றோம் (17-06-2024)

ரேபரேலியா? வயநாடா? கார்கே இல்லத்தில் ஆலோசனை!

ரயில்வே அமைச்சர் பதவி விலக எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்!

'கல்கி 2898 ஏடி' முதல் பாடல் வெளியானது!

அமித் ஷாவை நேரில் சந்தித்த கௌதம் கம்பீர்; காரணம் என்ன?

SCROLL FOR NEXT