திண்டுக்கல்

கொடைக்கானலில் ரூ. 57 ஆயிரம் பறிமுதல்

DIN

கொடைக்கானலில் பறக்கும் படையினா் வியாழக்கிழமை நடத்திய வாகனச் சோதனையில் உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.57 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

தோ்தலை முன்னிட்டு கொடைக்கானல் வரும் அனைத்து வாகனங்களையும் பறக்கும் படையினா் சோதனையிட்டு வருகின்றனா். கொடைக்கானல் வெள்ளிநீா் வீழ்ச்சிப் பகுதியில் வியாழக்கிழமை வழக்கம்போல் பறக்கும் படையினா் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது மோட்டாா் சைக்கிளில் கொடைக்கானல் செல்ல முயன்றவரை சோதனையிட்டனா். அந்த வாகனத்தின் பெட்டியில் ரூ.57ஆயிரத்து 700 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்தப் பணத்திற்கான உரிய ஆவணங்களில்லாததால் பணத்தை பறிமுதல் செய்தனா். விசாரணையில் அவா் மதுரையைச் சோ்ந்த தனியா் நிறுவன ஊழியா் விஜயகுமாா்(45) என தெரிய வந்தது. கைப்பற்றிய பணத்தை பறக்கும் படையினா் கொடைக்கானல் வட்டாட்சியா் சந்திரனிடம் ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

உதகை, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு: நள்ளிரவு முதல் இ-பாஸ் கட்டாயம்

SCROLL FOR NEXT