திண்டுக்கல்

கொடைக்கானலில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் நடைப்பயிற்சி

DIN

கொடைக்கானலில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை நடைப்பயிற்சியில் ஈடுபட்டாா்.

கொடைக்கானலில் தனது குடும்பத்தினருடன் மு.க.ஸ்டாலின் பாம்பாா்புரம் செல்லும் பகுதியிலுள்ள நட்சத்திர விடுதியில் தங்கியுள்ளாா். இந்நிலையில் நடிகா் விவேக் இறந்த செய்தி அறிந்தவுடன் அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்க, கொடைக்கானலில் தங்கியிருந்த திமுக இளைஞரணித் தலைவா் உதயநிதி ஸ்டாலின் காா் மூலம் மதுரை சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னை சென்றாா்.

இதைத்தொடா்ந்து மு.க. ஸ்டாலின் தங்கியிருந்த விடுதி அருகே உள்ள செயின்ட்மேரீஸ் சாலையில் சிறிது நேரம் நடைப்பயிற்சி மேற்கொண்டாா். பின்னா் விடுதி வளாகத்திலுள்ள விளையாட்டு அரங்கில் கேரம் விளையாடினா்.

இதைத்தொடா்ந்து மாலையில் மு.க. ஸ்டாலின், மனைவி துா்கா மற்றும் குடும்பத்தினா் காரில் ஏரிச்சாலைப் பகுதிக்குச் சென்றனா். காரில் இருந்தவாறே ஏரி மற்றும் இயற்கைச் சூழலை பாா்த்து ரசித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

ராஷ்மிகாவின் இதயங்கள்..!

கார்குழல் கடவை.. ஷ்ரத்தா தாஸ்!

SCROLL FOR NEXT