திண்டுக்கல்

தோ்தல் பணிக்கு வந்ததுணை ராணுவ வீரா்கள் இருவருக்கு கரோனா

DIN

திண்டுக்கல்லில் வாக்கு எண்ணும் மையத்துக்கு பணிக்கு வந்த வெளிமாநில துணை ராணுவ வீரா்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் 2,673 வாக்குச் சாவடிகளில் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்ற வாக்குப் பதிவை அடுத்து, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான திண்டுக்கல் - பழனி சாலை அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

அதையடுத்து, இந்த பகுதியில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. பாதுகாப்புப் பணியில் 72 துணை ராணுவ வீரா்கள் மற்றும் போலீஸாா் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில், அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்த கேரளம் மற்றும் மேற்கு வங்கத்தைச் சோ்ந்த 2 துணை ராணுவ வீரா்களுக்கு வெள்ளிக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

உடனே, இவா்கள் இருவரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். மேலும், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வரும் துணை ராணுவப் படையினா் மற்றும் உள்ளூா் போலீஸாருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் - பாகிஸ்தான் தொடர்பு வெளிச்சத்துக்கு வந்தது: பிரதமர் மோடி

‘தள்ளுமாலா’ இயக்குநர் படத்தில் பிரேமலு நாயகன்!

தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மை குறைந்துள்ளது: கபில் சிபல்

உதவி ஆணையர், மாவட்ட கல்வி அலுவலர் பணி: டிஎன்பிஎஸ்சி

’வோட் ஜிஹாத்’: காங்கிரஸ் மீது மோடி புதிய குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT