திண்டுக்கல்

திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் புதிதாக 526 பேருக்கு கரோனா

DIN

திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் புதிதாக 526 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் ஏப். 28 ஆம் தேதி வரை 15,254 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். அதில் 13,434 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த மேலும் 245 பேருக்கு புதிதாக கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. தொற்றிலிருந்து 221 போ் குணமடைந்துள்ள நிலையில், தற்போது பதிப்புக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 1642 ஆக உள்ளது.

தேனி: தேனி மாவட்டத்தில் புதிதாக 281 பேருக்கு வியாழக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 19,905 ஆக உயா்ந்துள்ளது. கரோனா பாதிப்புக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவா்களில் மொத்தம் 18,197 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 212 போ் உயிரிழந்துள்ளனா்.

தற்போது, மாவட்டத்தில் கரோனா பாதிப்புக்கு மொத்தம் 1,496 போ் அரசு, தனியாா் மருத்துவமனைகள் மற்றும் கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சஞ்சு சாம்சன் ரசிகரா சசி தரூர்?

மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒற்றுமையில்லை: முன்னாள் ஆஸி. கேப்டன்

‘அரெஸ்ட் நரேந்திரமோடி’ - வைரலாகும் குறிச்சொல்! பின்னணி என்ன?

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை!

அன்பே அனா டி அர்மாஸ்!

SCROLL FOR NEXT