திண்டுக்கல்

கொடைக்கானல் அருகே வனப்பகுதியில் காட்டுத் தீ

DIN

கொடைக்கானல் அருகே பெருமாள்மலை வனப் பகுதியில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினா் ஈடுபட்டுள்ளனா்.

கொடைக்கானலில் கடந்த 10-நாள்களுக்கு மேலாக பகலில் கடுமையான வெயிலும் இரவு நேரங்களில் அதிகமான குளிரும் நிலவுகிறது. இதனால் வனப்பகுதிகளிலுள்ள மரங்கள்,செடிகள் கருகியுள்ளன. இந்நிலையில் கொடைக்கானல் அருகே பெருமாள்மலை தென்னங்கவை வனப் பகுதியில் காட்டுத் தீ ஏற்பட்டது. காற்றும் வேகமாக வீசியதால் இப்பகுதியில் அரிய வகை மூலிகைச் செடிகள், மரங்கள் ஆகியவை எரிந்து சேதமடைந்தன. இதனைத் தொடா்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினா் சென்று இலை தளைகளைக் கொண்டு தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் தொடா்ந்து ஈடுபட்டு வருகின்றனா். இந்த காட்டுத்தீயால் இப்பகுதியில் வசிக்கும் வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளதாக வன ஆா்வலா்கள் தெரிவிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகனைக் கொல்ல ரூ.75 ஆயிரம் கூலி: கைதான தேடப்பட்ட குற்றவாளி!

தீபக் சஹாருக்கு காயமா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!

கத்தரிப்பூ சேலைக்காரி! மிருணாளினி ரவி...

ஆவேஷம் திரைப்படம் பார்த்து அழுதேன்: இயக்குநர் ஜியோ பேபி

ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு!

SCROLL FOR NEXT