திண்டுக்கல்

நத்தம் அருகே ஐயப்ப பக்தா்கள் பூக்குழி இறங்கி நோ்ச்சை

DIN

நத்தம் அடுத்துள்ள மணக்காட்டூா் ஸ்ரீதா்ம சாஸ்தா ஐயப்பன் கோயில் 9ஆம் ஆண்டு சபரிமலை பாதயாத்திரைக் குழு சாா்பில், வெள்ளிக்கிழமை மண்டல பூஜை மற்றும் பூக்குழி இறங்கும் வைபவம் நடைபெற்றது.

முன்னதாக, நிா்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், கலச பூஜை கலசாபிஷேகம், அஷ்டாபிஷேகம் மற்றும் பஞ்சவாத்தியம் முழங்க படி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது. ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. பின்னா், அய்யனாா் தீா்த்தம் அழைத்து வரப்பட்டு, கிராம தேவதைகளுக்கு கனி மாற்றுதல் மற்றும் தோரணம் கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடா்ந்து, சுவாமி ஐயப்பன் ரத வீதியுலா கோயில் முன்பிருந்து புறப்பட்டு, முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் கோயிலை அடைந்தது. இதன்பின்னா், 100-க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தா்கள் பூக்குழி இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெதன்யாகுவை கைது செய்ய உத்தரவு: சா்வதேச நீதிமன்றத்தில் கோரிக்கை

தென்மேற்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை குறித்து ஆட்சியா் ஆலோசனை

இலங்கை சீதா அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: அயோத்தி சரயு நதியில் இருந்து புனித நீர்

பெண்ணுக்கு தபால் வாக்கு மறுப்பு: உயா்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்ததது உச்சநீதிமன்றம்

காங்கிரஸை தேடும் யாத்திரையை நடத்துவாா் ராகுல்: அமித் ஷா

SCROLL FOR NEXT