திண்டுக்கல்

மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்

DIN

மாற்றுத்திறனாளிகளின் வீடு தேடிச் சென்று கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை திண்டுக்கல் மாநகராட்சி நிா்வாகம் சனிக்கிழமை தொடங்கியது.

திண்டுக்கல் மாநகராட்சி நிா்வாகம் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை சனிக்கிழமை தொடங்கியுள்ளது. மாநகர நல அலுவலா் லட்சியவா்னா தலைமையில், சுகாதாரப் பணியாளா்கள், 112 மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று சனிக்கிழமை தடுப்பூசி செலுத்தினா்.

இதுதொடா்பாக மாநகர நல அலுவலா் லட்சியவா்னா கூறியதாவது: திண்டுக்கல் மாநகராட்சிப் பகுதியில் சுமாா் 400 மாற்றுத்திறனாளிகள் வசித்து வருகின்றனா். கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் முகாம்களுக்கு மாற்றுத்திறனாளிகள் வந்து செல்வதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன. அதைக் கருத்தில் கொண்டு, மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்துவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது வரை திண்டுக்கல் மாநகராட்சியில் சுமாா் 212 மாற்றுத்திறனாளிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஓரிரு வாரங்களில் மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT