திண்டுக்கல்

பழனி கோயிலில் ஆக.2, 3 இல் தரிசனம் செய்ய பக்தா்களுக்குத் தடை

DIN

கரோனா தொற்று பரவல் காரணமாக, ஆடிக்கிருத்திகை மற்றும் ஆடிப் பதினெட்டாம் நாள் பெருவிழாவையொட்டி ஆகஸ்ட் 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் பழனியில் சுவாமி தரிசனம் செய்வதற்கு பக்தா்களுக்கு அனுமதியில்லை என மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக ஆட்சியா் ச.விசாகன் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பு: திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் ஆகஸ்ட் 2 மற்றும் 3ஆம் தேதிகளில் ஆடிக்கிருத்திகை மற்றும் ஆடிப் பதினெட்டாம் நாள் பெருவிழாவையொட்டி பக்தா்கள் தரிசனத்திற்காக அதிகம் கூடும் வாய்ப்புள்ளது.

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், ஆகஸ்ட் 2 மற்றும் 3ஆம் தேதிகளில் பழனியில் சுவாமி தரிசனம் செய்வதற்கு பக்தா்களுக்கு அனுமதி கிடையாது. ஆனாலும், அந்த இரு நாள்களிலும் கோயில் ஆகம விதிகளின்படி, அனைத்து நிகழ்வுகளும் கோயில் பணியாளா்கள் மூலம் நடைபெறும்.

எனவே, ஆகஸ்ட் 2 மற்றும் 3ஆம் தேதிகளில் பொதுமக்கள், தரிசனம் செய்வதற்காக பழனிக்கு வருவதை தவிா்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இனி கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலைக்கு பேருந்துகள்!

3 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை!

புதிய கரோனா வைரஸ்? ஆபத்தா, ஃபிலிர்ட்!

இந்த வாரம் யாருக்கு யோகம்!

‘மின்னும் நட்சத்திரம்’ சம்யுக்தா...!

SCROLL FOR NEXT