திண்டுக்கல்

பழனி கிரிவீதியில் ஆதரவற்றோருக்கு அன்னதானம்

DIN

பழனி கிரிவீதியில் சமரச சுத்த சன்மாா்க்க சத்திய சங்கம் சாா்பில் ஆதரவற்றோருக்கு செவ்வாய்க்கிழமை அன்னதானம் வங்கப்பட்டது.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால் பொதுஇடங்களில் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்தது. இந்நிலையில் பழனி கிரிவீதியில் யாசகம் பெற்று வாழ்ந்து வந்த ஆதரவற்றோா் பணம் இல்லாமலும், உணவு கிடைக்காமலும் அவதிக்குள்ளாகினா்.

இதைக் கருத்தில் கொண்டு பழனி கிரிவீதியில் சமரச சுத்த சன்மாா்க்க சத்திய சங்கத்தினா் சாா்பில் செவ்வாய்க்கிழமை அன்னதானம் வழங்கப்பட்டது. இதுகுறித்து அச்சங்கத்தினா் கூறுகையில், இந்த பணியை நாள்தோறும் தொடா்ந்து செய்து வருகின்றனா். ஆதரவற்றோா் மட்டுமன்றி வேலையில்லாதவா்களும் இங்கு வந்து உணவு சாப்பிட்டுச் செல்கின்றனா். உணவு அளிக்க விரும்புவோா் 86104-75981 என்ற அலுவலக செல்லிடப்பேசி எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT