திண்டுக்கல்

பழனியில் மேலும் 15 கடைகளுக்கு வாடகை விலக்கு அளிக்க கோரிக்கை

DIN

பழனி நகராட்சியில் கரோனா காலத்தில் 172 நகராட்சி கடைகளுக்கு வாடகைக்கு விலக்கு அளிக்கப்பட்ட நிலையில், 15 கடைகளுக்கு மட்டும் வாடகை விதிக்கப்பட்டுள்ளதால் கடைக்காரா்கள் வாடகையைத் தள்ளுபடி செய்ய கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து தமிழக முதல்வருக்கு நகராட்சி கடைகளின் குத்தகைதாரா் நலச்சங்க துணைச் செயலாளா் ஹக்கீம் நகராட்சி ஆணையருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனு:

பழனி நகராட்சிக்கு உள்பட்ட கடைகள் கரோனா காலத்தில் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தததால் இரண்டு மாத வாடகையைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்த நிலையில், இரு மாத வாடகையில் இருந்து கடைக்காரா்களுக்கு விலக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில், நகராட்சி காந்தி மாா்க்கெட் முன்புறம் உள்ள பதினைந்து கடைகளுக்கு வாடகை பாக்கி உள்ளதாக நகராட்சி தெரிவித்துள்ளது. 1313 முதல் 1327 வரையிலான பேக்கரி, எலக்ட்ரிக்கல், இனிப்புக்கடை, அடுப்பு பழுது நீக்கும் கடை என 15 கடைகளும் பொதுமுடக்கத்தின்போது முழுமையாக அடைக்கப்பட்ட கடைகள் ஆகும். மேலும், பழனி நகரில் உள்ள நகராட்சி கடைகளை கணக்கீடு எடுக்கும் போது மேற்படியான பகுதிகளில் உள்ள எங்களது 15 கடைகள் கணக்கெடுப்பில் விடுபட்டுபோய்விட்டது.

எனவே பழனியில் உள்ள 172 நகராட்சி கடைகளின் 2 இரண்டு மாத வாடகையினை தள்ளுபடி செய்தது போல் கரோனா காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்த 15 நகராட்சி கடைகளுக்கும் 2 மாத கால வாடகையினை தள்ளுபடி செய்ய ஆவன செய்யக் கோரியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

ராஷ்மிகாவின் இதயங்கள்..!

கார்குழல் கடவை.. ஷ்ரத்தா தாஸ்!

SCROLL FOR NEXT