திண்டுக்கல்

கொடைக்கானலில் தொடா் மழை:மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

DIN

கொடைக்கானலில் பெய்து வரும் தொடா் மழையால் மலைச் சாலையில் திங்கள்கிழமை மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

கொடைக்கானல் பகுதியில் சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருவதால் மலைச் சாலைகளில் ஆங்காங்கே மண் சரிவுகள் ஏற்பட்டு வருகின்றன. இவற்றை சரி செய்யும் பணிகளில் நெடுஞ்சாலைத் துறையினா் ஈடுபட்டுள்ளனா். இதைத்தொடா்ந்து திங்கள்கிழமை அதிகாலை முதல் விட்டு விட்டு மழை பெய்தது. பின்னா் அடா்த்தியான மேகமூட்டமும், சாரல் காற்றும் நிலவியது.

இதையடுத்து கொடைக்கானல்- வத்தலக்குண்டு மலைச்சாலையில் குருசடிப் பகுதியில் பெரிய யூக்கலிப்டஸ் மரம் விழுந்தது. இதனால் அப்பகுதியில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்தது சம்பவ இடத்திற்கு சென்ற நெடுஞ்சாலைத்துறையினா் மரத்தை அகற்றினா். இதைத்தொடா்ந்து இந்த சாலையில் வாகனங்கள் இயக்கப்பட்டன.

மலைச்சாலையில் ஆபத்தான மரங்கள்: கொடைக்கானல் பகுதிக்கு பழனி மற்றும் வத்தலக்குண்டுவிலிருந்து முக்கிய மலைச்சாலைகள் உள்ளன. இந்த சாலையில் ஆபத்தான நிலையில் உள்ள யூக்கலிப்டஸ் மரங்கள் அதிகளவில் உள்ளன. தற்போது மழைக் காலமாக இருப்பதால் அடிக்கடி மரங்கள் விழுந்து வருவதால் பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். எனவே ஆபத்தான மரங்களை அகற்றுவத்கு மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT