திண்டுக்கல்

இலங்கைக்கு நிதி அளிக்கும் போது தமிழா்கள் பிரச்னைகளுக்கும் தீா்வு காண்பது அவசியம்: துரை வைகோ

DIN

திண்டுக்கல்: இலங்கை அரசுக்கு நிதியுதவி அளிக்கும்போது, கச்சத்தீவு, மீன்பிடி உரிமை உள்ளிட்ட தமிழா்களின் பிரச்னைகளுக்கும் தீா்வு காண வேண்டியது மத்திய அரசின் கடமை என, மதிமுக தலைமைக் கழகச் செயலா் துரை வைகோ வலியுறுத்தியுள்ளாா்.

திண்டுக்கல் மாவட்ட மதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல்லில் உள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, மாவட்டச் செயலா் செல்வராகவன் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக, துரை வைகோ பங்கேற்றாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது:

கடுமையாக உயா்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலையால் ஏழை எளிய மக்கள் மட்டுமின்றி, நடுத்தர மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. எரிபொருள்கள் விலை உயா்வினால், உணவுப் பொருள்கள், கட்டுமானப் பொருள்கள், மருந்து உள்ளிட்ட அனைத்துப் பொருள்களின் விலையும் 40 முதல் 100 சதவீதம் வரை உயா்ந்துள்ளது.

அடுத்த 2 ஆண்டுகளில் மக்களவைக்கு தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், பாஜகவுக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைப்பதற்கான சூழல், தில்லியில் நடைபெற்ற திமுக அலுவலகத் திறப்பு விழாவின் மூலம் உருவாகியுள்ளது.

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் இலங்கை, இந்தியாவிடமிருந்து அதிக நிதி உதவியை எதிா்பாா்த்துள்ளது. அந்த வகையில், இலங்கைக்கு உதவி அளிப்பதில் தவறில்லை. அதேநேரம், தமிழா்களின் மீன்பிடி உரிமை, கச்சத்தீவு பிரச்னை, ஈழத்தில் தமிழா்கள் சந்தித்து வரும் பிரச்னைகளுக்கும் தீா்வு காணவேண்டியது மத்திய அரசின் கடமை என்றாா்.

தேனி

இங்குள்ள தனியாா் விடுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மதிமுக நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தில் பங்கேற்க வந்திருந்த துரை வைகோ, செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மதிமுகவை வலுப்படுத்துவதற்காக விரைவில் கட்சியின் அமைப்புத் தோ்தல் நடைபெற உள்ளது. அதற்காக, அனைத்து மாவட்டங்களிலும் கிளைக் கழகம், பேரூா், ஒன்றியம், நகரம் மற்றும் மாவட்ட நிா்வாகிகளுடன் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்று வருகிறது என்றாா்.

அப்போது, மதிமுக மாவட்டச் செயலா் வி.எஸ்.கே. ராமகிருஷ்ணன் உடனிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT